தர்மபுரி: அனுமதி இன்றி ஊர்வலமாக சென்ற தவெகவினர் மீது வழக்கு

0பார்த்தது
தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சிவன், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தர்மபுரி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்றார். அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதாக தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள், நகர காவல் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர். இதன் பேரில், 50 பேர் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி