தருமபுரியில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி இல்லத் திருமண விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (நவ. 03) திங்கட்கிழமை கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஏவா. வேலு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.