தர்மபுரி: புதிய ஸ்கேன் மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்

0பார்த்தது
தர்மபுரி: புதிய ஸ்கேன் மையத்தை திறந்து வைத்த ஆட்சியர்
தருமபுரி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், புதிய ஈகோ சிஸ்டம் ஸ்கேன் மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளையும் ஆய்வு செய்தார். நோயாளிகள் பதிவு பிரிவில் கணினியில் விவரங்கள் பதிவு செய்வது குறித்தும் அவர் கேட்டறிந்தார். மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி