தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் சதீஸ் நேற்று நவம்பர் 12 புதன்கிழமை மாலை கொடி அசைத்து விழிப்புணர்வுப் பேரணியினை துவக்கி வைத்தார். மேலும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் முக்கிய அலுவலர்கள் உடனிருந்தனர்.