குழந்தைகள் தினமான நேற்று (நவ. 14) வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி துவங்கி வைத்தார். தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.