தருமபுரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டம்

3பார்த்தது
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில், நவம்பர் புரட்சி தினம் வெள்ளிக்கிழமை மாலை தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வத்தல்மலை ஜி ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், செங்கொடியை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி இரவி ஏற்றி வைத்தார். தொழிற்சங்க தலைவர் எஸ் சுந்தரம், கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ பிரதாபன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஏராளமான கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி