தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

3பார்த்தது
தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், இலக்கியம்பட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சதீஸ் குத்து விளக்கு ஏற்றி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100 கர்ப்பிணிப் பெண்கள் இதில் பங்கேற்றனர். அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் ஏழு வகையான உணவுகள் சீமந்த சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி