நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தை நேற்று (நவம்பர் 23) கூடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். நாட்டுக்கோழிகள் ரூ. 350 முதல் ரூ. 1400 வரை விற்பனையான நிலையில், வியாபாரிகள் தரப்பில் மொத்தம் ரூ. 3.50 லட்சம் வர்த்தகம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.