தர்மபுரி: பிடமனேரி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

187பார்த்தது
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் உள்ள பிடமனேரி ஏரியில் திங்கட்கிழமை காலை டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. விடியற்காலை நடைப்பயிற்சி சென்ற பொதுமக்கள் ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அருகே சென்று பார்த்தபோது, ஏரியில் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதப்பதாக அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.

தொடர்புடைய செய்தி