தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை, நவம்பர் 18 அன்று விடியற்காலை முதல் கனமழை பெய்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, பெரியப்பட்டி 16.4 மிமீ, தீர்த்தமலை 16 மிமீ, மாம்பட்டி 12.8 மிமீ, மருதிபட்டி 10.4 மிமீ, நவலை 8.8 மிமீ, அரூர் 8 மிமீ, வேப்பம்பட்டி 8 மிமீ, மற்றும் கம்பைநல்லூர் 5.2 மிமீ என மழை பதிவாகியுள்ளது.