தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, தர்மபுரியில் 12 மிமீ, பாலக்கோட்டில் 29 மிமீ, மாரண்டஹள்ளியில் 21 மிமீ, பென்னாகரத்தில் 2 மிமீ, அரூரில் 11 மிமீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 4.2 மிமீ, மொரப்பூரில் 10 மிமீ, நல்லம்பள்ளியில் 3.2 மிமீ என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 92.4 மிமீ ஆகவும், சராசரி மழை அளவு 10.26 மிமீ ஆகவும் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.