தர்மபுரி: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சௌமியா அன்புமணி

393பார்த்தது
தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி அருகே மாட்டுக்காரனூர் பகுதியில் இன்று சனிக்கிழமை, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தினார். அப்போது, பொதுமக்களின் அனைத்து குறைகளையும் மனுவாக எழுதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவே நான் உள்ளே இருப்பதாக அவர் தெரிவித்தார். அவருக்கு அப்பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் பாமக முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி