தர்மபுரி: மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

81பார்த்தது
தர்மபுரி: மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், உயர் மட்ட மேம்பாலம் பகுதி தொடங்கும் இடம், கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துகள் நடந்த இரட்டைப் பாலம், எலிவேட்டட் காரிடாரின் முடிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி, எவ்வித அசம்பாவிதங்களுமின்றி குறிபிட்ட காலவரைக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி