தர்மபுரி: தேமுதிக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

2பார்த்தது
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தே. மு. தி. க. வேட்பாளர் டாக்டர் வி. இளங்கோவன் புதன்கிழமை நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம், இந்திரா நகர், அவ்வை வழி, ஒட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்தும், மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் தேமுதிக, திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி