தர்மபுரி: திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம்

51பார்த்தது
தர்மபுரி: திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மாற்றம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகப் பொறுப்பாளராக செயல்பட்டு இருந்த தடங்கம் சுப்பிரமணி முன்னாள் எம்எல்ஏ சில நாட்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பெண்ணாகரம் தொகுதியை சேர்ந்த தர்மச்செல்வன் என்பவர் திமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே மார்ச் 18 இன்று பி. தர்மசெல்வனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியை தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கூட்டத்தில் பி. தர்மசெல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது