தருமபுரி இண்டூர் பேருந்து நிலையத்தில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் பறித்து மக்களை வஞ்சிக்கும் மோடி அரசையும், அதற்கு துணை போகும் அதிமுகவினரையும் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி எம்பி. மணி தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தடங்கம். சுப்ரமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள், கூட்டணி கட்சியினர், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.