தர்மபுரி: கஞ்சா பதுக்கிய முதியவர் கைது

0பார்த்தது
தர்மபுரி: கஞ்சா பதுக்கிய முதியவர் கைது
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பச்சமுத்து மற்றும் காவலர்கள் செவ்வாய்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். மிட்டாநூல அள்ளி கண்ணன் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த முதியவரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின்னாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் (70) என்பது தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய காவலர்கள் பச்சையப்பனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி