தர்மபுரி: மாவட்ட செய்தியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல்விழா

0பார்த்தது
தர்மபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தர்மபுரி ஆட்சியர் சதீஷ், எஸ்பி மகேஸ்வரன், தர்மபுரி எம்பி மணி, பாலக்கோடு எம்எல்ஏ கேபி அன்பழகன், தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செய்தியாளர்கள், அரசு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த விழாவில், மண்பானையில் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினர்.

தொடர்புடைய செய்தி