தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே போலி மருத்துவர் கைது

4பார்த்தது
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே போலி மருத்துவர் கைது
தருமபுரி மாவட்டம், தின்னஅள்ளி மயில்கொட்டாயில், பிளஸ் டூ மட்டுமே படித்துவிட்டு, இளைஞர்களுக்கு போதை ஊசி செலுத்தியும், ஆங்கில மருத்துவம் பார்த்தும் வந்த போலி டாக்டர் வஜ்ரவேல், அதியமான்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ஆங்கில மருந்து மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் மற்றும் சிரஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி