தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆட்சியர் சதீஷ் விளக்கினார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.