தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையை பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும், சர்க்கரை ஆலை மூலம் மாதந்தோறும் அனுப்பப்படும் பயிற்சி கையேடு விவசாயிகளுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.