தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்

56பார்த்தது
தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர் தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024-25) உரத்தேவை 41,030 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது.

  13,587 மெட்ரிக்டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா, பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா, அசோஸ்பாஸ், ஜிங்க் சொலுபிலைசிங் பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2024-2025ஆம் ஆண்டிற்கு 55,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 50,410 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி