தருமபுரி நகராட்சி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் பேருந்துகள் இயக்கவும் நிறுத்தவும் ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து காவல்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், புதன்கிழமை தருமபுரி காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குள் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.