தர்மபுரி: பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது

0பார்த்தது
தர்மபுரி: பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
தர்மபுரி மதிகோன் பாளையம் காவல் ஆய்வாளர் சந்திரகலா மற்றும் காவலர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குண்டல்பட்டி சனத்குமார் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேவன், வடிவேல், சார்லஸ், சின்னசாமி, சண்முகம் ஆகியோரை காவலர்கள் துரத்திப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.64 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 7 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி