கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தருமபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில் இன்று (டிச. 03) புதன்கிழமை பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சாமந்தி பூ ₹100-120, மல்லி பூ ₹1000-1400, கனகா மரம் ₹800/கிலோ, பட்டன் ரோஸ் ₹200-250 என விற்பனை செய்யப்படுகிறது. தீபத் திருவிழா மற்றும் சபரிமலை சீசன் காரணமாக பூக்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.