தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 19.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் அமைப்பதற்கும், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் மிதிவண்டி நிழற்கூடம் அமைப்பதற்கும் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பள்ளி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் அமைச்சருக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.