திமுக வேட்பாளராக பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் எம்பி செந்தில்குமார், வியாழக்கிழமை பைசுஅள்ளியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் இப்பகுதிக்கு எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும், இளைஞர்கள் வேலைக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்வதாகவும் குற்றம் சாட்டி வாக்கு சேகரித்தார்.