தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வார சந்தையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர். இங்கு ஆடுகளின் தரம் மற்றும் ரகத்தைப் பொறுத்து ₹2,800 முதல் ₹21,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. ஒரே நாளில் ₹22 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.