தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தையில் நடைபெறுவது வழக்கம். இன்று காலை நடைபெற்ற வார சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி. உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 22000 ரூபாய் வரை விற்பனையானது. சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் இன்று 37 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.