தர்மபுரி: சந்தைப்பேட்டையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

0பார்த்தது
தர்மபுரி சந்தைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆட்டுச் சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகளின் ரகம் மற்றும் அளவைப் பொறுத்து, 3,500 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. வியாபாரிகளின் தகவலின்படி, ஒரே நாளில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி