தர்மபுரி: நள்ளிரவில் இடைவிடாமல் கொட்டிய கனமழை

0பார்த்தது
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய தர்மபுரி நகரம், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இலக்கியம்பட்டி பகுதியில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.