தர்மபுரி: தர்மபுரியில் விடியற்காலையில் கொட்டிய கனமழை

0பார்த்தது
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று நவம்பர் 22 சனிக்கிழமை விடியற்காலை முதல் தர்மபுரி, செந்தில்நகர், இலக்கியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.