தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று 102 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தருமபுரி, அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பெண்ணாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, தொப்பூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.