தர்மபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, நல்லம்பள்ளி, தொப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்துள்ளது. இதனால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.