தர்மபுரி மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் கனமழை பெய்தது. தர்மபுரி நகரம், பென்னாகரம், நாகமரை, ஏரியூர், நாகதாசம்பட்டி, வெள்ளக்கல், ஜருகு, கம்பைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இருப்பினும், மாவட்டம் முழுவதும் மழை பொழியும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.