தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கமாக மார்கழி மாதத்தில் காணப்படும் பனிப்பொழிவு, தற்போது பருவமழை காரணமாக சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நல்லம்பள்ளி, கோவிலூர், பூதனஹள்ளி, நார்த்தம்பட்டி, பாலக்கோடு, கடமடை, பொடுத்தம்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 9 மணி வரை பனிப்பொழிவு நிலவியது. இதனால், அதிகாலை நேர அத்தியாவசியப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.