தருமபுரி அரசு பட்டுக்கூடுகள் அங்காடியில் புதன்கிழமை (நவ. 19) நடைபெற்ற ஏலத்தில், தருமபுரி மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும் 17 விவசாயிகள் 1398 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ரூ. 787, சராசரியாக ரூ. 730, குறைந்தபட்சம் ரூ. 575 என மொத்தம் ரூ. 10, 22, 262-க்கு விற்பனை நடைபெற்றதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.