தர்மபுரி: ஆதிசக்தி மேல் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகவிழா

0பார்த்தது
நல்லம்பள்ளி ஊராட்சி நாகலாபுரம் கிராமத்தில் உள்ள ஆதிசக்தி மேல்மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, கணபதி பூஜை நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you