தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் திங்கட்கிழமை அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 30 ஆம் தேதி கால் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா இனிதே நிறைவடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.