தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

60பார்த்தது
தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசனின் பாராளுமன்ற உரையைக் கண்டித்து தொலைபேசியில் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்ததைக் கண்டித்தும், கொலைமிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் அ. குமார் கண்டன உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி