தர்மபுரி: பாலக்கோட்டில் காவலர்களுக்கு மருத்துவ முகாம்

0பார்த்தது
தர்மபுரி: பாலக்கோட்டில் காவலர்களுக்கு மருத்துவ முகாம்
சமீப காலமாக காவல்துறையில் பணிபுரிவோருக்கு இதயநோய், மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், தர்மபுரி எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, நேற்று நவம்பர் 15 சனிக்கிழமை பாலக்கோடு கோட்ட அளவிலான காவலர்களுக்கு அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. துணை சூப்பிரண்டு ராஜசுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி