தர்மபுரி மாவட்டத்திற்கு நேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வருகை புரிந்த நிலையில் நேற்று (டிசம்பர் 21) இரவு, தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னாசாகரம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி, தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பழனியப்பன், தர்மபுரி நகர கழக செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.