தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்ட பணியை புதன்கிழமை எம்எல்ஏ எஸ். பி. வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். மேலும், 6.50 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு ஆய்வக உபகரணங்களையும் வழங்கினார். தொடர்ந்து, 138 மாணவர்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.