தர்மபுரி: பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

2பார்த்தது
தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை பழைய தருமபுரி மைதானத்தில் மூத்தவல்லிகள் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பிறகு, ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சி தானமாக வழங்கப்பட்டது.