தர்மபுரி: 108 வது பிறந்தநாள் விழா கொண்டாடிய மூதாட்டி

386பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட பாளையம் புதூர் கூட்ரோடு பகுதியில் வசிக்கும் புட்டியம்மாளுக்கு திங்கட்கிழமை 108வது பிறந்தநாள் விழா மற்றும் கனகாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவருக்கு தற்போது 350க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு புட்டியம்மாளிடம் ஆசிர்வாதம் பெற்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

தொடர்புடைய செய்தி