தர்மபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் உரிமை மீட்பு பயண கூட்டத்தில் பேசிய சௌமியா அன்புமணி, தமிழக அரசு நல்ல திட்டங்களை கொண்டு வராது என்றும், விரைவில் பள்ளிக்கூட கேன்டின்களில் கஞ்சா, மதுபானம் பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் விற்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார். தர்மபுரி பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை என்றும், மக்கள் மருத்துவர் அன்புமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.