தர்மபுரி: அம்மன் கோயிலில் தாலி திருட்டு.. காவலர்கள் விசாரணை

463பார்த்தது
தர்மபுரி: அம்மன் கோயிலில் தாலி திருட்டு.. காவலர்கள் விசாரணை
தர்மபுரி அருகே ஓம் சக்தி கோயிலில் வியாழன் இரவு பூஜை முடிந்து ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலை வந்து பார்த்தபோது கோயில் பூட்டு திறந்து கிடந்தது. அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கோயில் முன்பு குவிந்தனர். பூசாரி குமரன் மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி