தருமபுரி மாவட்டம் தொப்பூர் டோல்கேட் அருகே நேற்று இரவு எஸ்.ஐ. செல்வபதி தலைமையிலான போலீசார் சரக்கு வாகனங்களிடம் மாமூல் வாங்கியபோது தனியார் தொலைக்காட்சி நிருபர் அதனை வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில், மாமூல் வசூலில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வபதி, மற்றும் தலைமை காவலர்கள் வெங்கடேசன், பரதன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.