தர்மபுரி: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; இன்று மின்நிறுத்தம்

57பார்த்தது
தர்மபுரி: மாதாந்திர பராமரிப்பு பணிகள்; இன்று மின்நிறுத்தம்
தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று  (ஜூன் 12) நடக்கிறது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என தமிழ்நாடு மின்பகிர்மான வட்ட தர்மபுரி செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட மொரப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மொரப்பூர், நைனாகவுண்டன்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி ஆகிய கிராமங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி