தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மாணவ மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வழங்கி, 2026-27 ஆம் ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், முதல் நாள் என்பதால் மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்குச் சென்றனர்.